tamilnadu

விருதுநகர், மதுரை, திண்டுக்கல் முக்கிய செய்திகள்

அன்னலட்சுமி காலமானார்
விருதுநகர், ஜூன் 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரான விருதுநகர் தோழர் பி.சீனிவாசன் மனைவி எஸ்.அன்ன லட்சுமி (90) வெள்ளியன்று மாலை காலமா னார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், நகர் செயலாளர் எல்.முருகன், ஒன்றியச் செய லாளர்கள் ஆர்.முத்துவேலு, பி.நேரு, வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலா ளர் எம்.சுப்புராம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத் ஆகியோர் அன்னாரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இறந்தவர் உடலை அகற்றுவதில் மெத்தனம்
மதுரை, ஜூன் 27-மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டி ருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக் கிழமை காலை உயிரிழந்தார். நமக்கு கிடைத்த தகவல்படி அவரது உடல் பிற் பகல் 3.30 மணி வரை எடுத்துச்செல்லப்பட வில்லை. இதனால் மற்ற நோயாளிகள் இறந்த உடலைப் பார்த்து சோகமாக அமர்ந்திருந்தனர். மருத்துவமனை நிர்வா கம் உயிரிழந்தவர்களின் உடலை உடனடி யாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கொரோனா நோயாளிகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவர்கள்.

தேசிய புள்ளிவிவரக் கணக்கெடுப்பு 
திண்டுக்கல், ஜூன் 27-  திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய புள்ளி விவர அலுவலகம் மூலம் விவசாய குடும்பங்களின் நிலை, மதிப்பீடு, நிலம், கால்நடை இருப்பு, கடன், முதலீடு உள் ளிட்ட விவரங்கள்; கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட உள்ளது. இந்தத் தகவல் கள் ரகசியமாக வைக்கப்படுமாம். திட்ட மிடல், கொள்கை உருவாக்கம், ஆராய்ச்சி போன்ற நோக்கத்திற்காக மட்டுமே பயன் படுத்தப்படுமாம். புள்ளிவிவரங்களை சேகரிப்பதற்கு கணக்கெடுப்பு அலுவலர் கள் வீடுகளுக்கு செல்ல உள்ளனர். கணக் கெடுப்பு அலுவலர்களுக்கு தேசிய புள்ளி விவர அலுவலகத்தால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டையுடன் களப்பணி மேற்கொள்ள களப்பணியாளர்களுக்கு மக்கள், உரிய விவரங்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.விஜயலட்சுமி, தெரிவித்துள் ளார். இது தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பின் ஒரு பகுதியா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.