வளமான விழுப்புரம், வளர்ச்சியில் முதலிடம் என்ற முழக்கத்தோடு தனது பிரச்சாரத்தை தொடங்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை
சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.இரவிக்குமார் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கனூர் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீத்தாபதி, விசிக விழுப்புரம் (வ) மாவட்டச் செயலாளர் சேரன்,மாவட்ட பொருளாளர் திலிபன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.