tamilnadu

img

போராட்ட அறிவிப்பு எதிரொலி... குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

உளுந்தூர்பேட்டை, செப். 30-  குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்ட  அறிவிப்பால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கும் நடவ டிக்கையை தொடங்கினர். உளுந்தூர்பேட்டை வட்டம் காட்டு எடை யார் கிராமத்தில் நீண்ட நாட்களாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காட்டு  எடையார் கிளை சார்பில் ஊர் பொதுமக்களு டன் இணைந்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்  டம் நடத்திட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சங்க நிர்வாகி களுடன் சனிக்கிழமையன்று (செப் 28)  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட  நிர்வாகி ஆர்.சீனிவாசன், மாவட்ட பொருளா ளர் வி.ரகுராமன் மற்றும் ஒன்றியத் தலைவர்  கே.ஜெயமூர்த்தி, பொருளாளர் ஆர்.செல்வ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் சன்னதி தெரு  மற்றும் தெற்கு தெருக்களுக்கு இரும்பு  பைப் லைன் அமைத்து குடிநீர் பிரச்ச னையை போக்குவது, பழுதடைந்துள்ள மினி  டேங்க்குகளை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, சிவன் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்துளை கிணற்றில்  இருந்து குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்க ளுக்கு வழங்குவது, புதிய ஆழ்துளை கிணறு  அமைத்து கா.பாளையம் பகுதியில் அனைத்து தெருக்களுக்கும் சீரான முறை யில் குடிநீர் விநியோகம் செய்யப்படும், வடக்குத்தெரு பகுதியில் சாலையில் குறுக்கே  உடைந்துள்ள கால்வாயை சீரமைக்க உட னடி நடவடிக்கை எடுப்பது, தெற்குத் தெருவில்  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாலை  அமைத்திட உடனடி நடவடிக்கை எடுப்பது,  காட்டுஎடையார் தலித் பகுதியில் பழுதடைந் துள்ள வீடுகளில் பணி நடைபெற்று பட்டியல் எடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அதற்கான தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வது என எழுத்துமூலமான உடன்பாடு ஏற்பட்டது. இத னால் திங்களன்று (செப்டம்பர் 30) நடைபெற  இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.