நிலுவையில் உள்ள பாலிசி பத்திரங்களை உடனே வழங்க வேண்டும், பாலிசிகளை ஷேர் மார்க்கெட்டில் பட்டியலிட கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு லிகாய் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் சம்பத், கிளைச் செயலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓசூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவர் முருகன் நாயனார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் கணேஷ், ரவி, வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.