விருதுநகர், மே 23- விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதை யடுத்து பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 81 ஆக இருந்தது. இந்நிலையில், புது தில்லியிலிருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த 165 பேரை விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் தனி மைப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப் பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
இதில், இராஜபாளையத்தைச் சேர்ந்த 22 வயது பெண், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த 22 வயது பெண், 51 வயது ஆண், மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த 50 வய துடைய இரு ஆண்கள், செவல்பட்டியைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய ஆண், பாவாலி யைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 52 வயது ஆண், இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த 57 வயது முதியவர், ஆகிய 13 பேருக்கும் தொற்று இருப்பது தெரியவந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலி ருந்து வருகை தந்தவர்கள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் 14 வயது சிறுவன் 12 வயது சிறுமி, குரண்டியைச் சேர்ந்த 57 வயது ஆண் ஆகியோருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.
தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரும் சிவ காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து விருதுநகர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 60 பேர் விருதுநகர், மதுரை, சிவகாசி ஆகிய இடங்க ளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கை மீறியவர்கள் பேர் மீது வழக்கு விருதுநகர் மாவட்த்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கபட்டுள்ளது. இந்த நிலையில், தடை உததரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9,319 பேர் மீது 7,574 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,682 இரு சக்கர கவாகனங்கள், 69 கார்கள், 78 ஆட்டோக்கள், 9 லாரிகள், 4 டிராக்டர்கள் என மொத்தம் 3,842 வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.