நாகப்பட்டினம், நவ.17- உழைப்பாளர் வர்க்கத்தின் ஓய்வறியாப் போராளி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், மார்க்சீய இயக்க வளர்ச்சிக்கு அயராது பாடு பட்ட தோழர் கோ.வீரய்யன் முத லாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு அலுவலக மான ‘வெண்மணி தியாகிகள் நினைவு இல்ல’த்தில், தோழர் ஜீவி யின் உருவப் படம், ஞாயிற்றுக் கிழமை அன்று, வீரவணக்க முழக் கங்களோடு திறந்து வைக்கப் பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, தோழர் ஜீவியின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்தார். சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், எம். முருகையன், ஏ.வி.சிங்காரவேலன், த.லதா, சி.வி.ஆர்.ஜீவானந்தம், ப. மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.வேணு, வி.அம்பிகாபதி, டி.ராசய்யன், டி.கணேசன், சினி.மணி, சி.விஜயகாந்த், ப.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.ரவிச்சந்திரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.வெண்ணிலா, மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சுபாதேவி, நாகை நகரப் பொறுப்புச் செயலாலர் சு.மணி, சிஐடியு மாவட்டத் தலைவர் பி. ஜீவா, டி.சிம்சன், சொ.கிருஷ்ண மூர்த்தி, பி.செல்வராஜ், என்.பன்னீர் செல்வம், பி.எம்.நன்மாறன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.