கடலூர்,ஏப். 29- கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்திலும் விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி மின்வாரியம் அராஜகம் செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க லைன் எடுத்துச் செல்ல விருதாச்சலம் வட்டம் புது விருதகிரி குப்பத்தில் ராயப்பன் என்கிற விவசாயி தோட்டத்தில் அனுமதி இல்லாமல் தேக்கு, மா, பலா மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியமும், பவர் கிரீடம் நிறுவனமும் இந்த செயலை செய்துள்ளது என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த செயலை கண்டித்து உள்ள தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகளின் ஒப்புதல் இன்றி விவசாய நிலங்களில் மின் கோபுரம், மின்சார பந்தல் அமைப்பதை தடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கோ. மாதவன் கேட்டுக் கொண்டுள்ளார்.