விவசாயத் தொழிலாளர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கக் கோரி கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. (இடது) கடலூரில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு கலந்து கொண்டார். (வலது) சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் பங்கேற்றார்.