விழுப்புரம், ஏப்.4- விழுப்புரம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,“தமிழகத்தில் மாநில அரசு அதிகார துஷ்பிரயோகத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறது” என்றார். இந்திய தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக சேர்ந்திருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து தங்கள் அனைத்து அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற திட்டங் களை நிறைவேற்றி வருகிறது.தேர்தல் ஆணையம், மாநில நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை ஆகிய அனைத்து துறையும் இணைந்து திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதற்கு உதாரணம் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில், அவர் மகன் வீட்டில் சோதனை நடந்ததே என்றும் அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின்போது மாவட்டச் செயலாளர் ஏவி.சரவணன் உடனிருந்தார்.