விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி, ஜூலை 28- கொரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிடக் கோரி விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொரோனா கால நிவாரணமாக மாத மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும். கொரோனா பரிசோத னையை வீடு வீடாக நடத்தி பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்திட வேண் டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, பேரூராட்சி பகுதி களிலும் விரிவுபடுத்திட வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல இடங்களில் அகில இந் திய விவசாயத் தொழிலாளார் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் கே.மகாலிங்கம், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி்.பி.இளங்கோவன், செயலா ளர் வி.ஆர்.பழனிச்சாமி, பொருளாளர் தங்கவேல், காளப்பண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயராகவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரி
தருமபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டி பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட் டத் துணைத் தலைவர் கே.கோவிந்த சாமி, மாவட்ட பொருளாளர் இ.கே.முரு கன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் ஆ.பஞ்சலிங்கம், பஞ் சாலை சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.கிருஷ்ணசாமி உட்பட பலர்கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கொளத்தூர், ஓமலூர், சங்ககிரி, எடப் பாடி கொங்கணாபுரம், பனமரத்துப் பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கவேலு, மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலை வர் சின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.