tamilnadu

img

வெனிசுலாவின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சி

வெனிசுலா நாட்டின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார்.வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து மதுரோவை அகற்றுவதற்கு அமெரிக்க உதவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் கைடோவுக்கு அனைத்து வித உதவியும் செய்து வருகிறது. அத னால் தெருக்களில் இறங்கி கலகத்தில் ஈடுபடுகின்றனர். கடந்த ஏப்ரல் 30ந்தேதி பொது மக்கள் மற்றும் ராணுவத்தினரை தூண்டும் விதத்தில் ஜூவான் கைடோ பேசினார்.இதற்கு பதிலடியாக மதுரோ, அனைத்து பகுதிகள் மற்றும் மண்டலங்களை சேர்ந்த ராணுவத்தினரும், மக்களுக்கும், அரசியல் அமைப்புக்கும் மற்றும் நாட்டுக்கும் முழு விசுவாசமுடன் இருக்கும்படி வலியுறுத்தினார்.வெனிசுலாவில் ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி வன்முறை கலகமாக உருவெடுத்தது. இதில் 240 பேர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் தூதர அலுவலகம் தெரிவித்து உள்ளது.இந்த நிலையில் மதுரோ செய்தியாளர் களிடம் கூறும்பொழுது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு வெனிசுலா நாட்டின் எண்ணெய், இயற்கை வளங்களான தங்கம், எரிவாயு, வைரங்கள் மற்றும் பிற பொருட்கள் தேவை. வெனிசுலா போரில் ஈடுபடாது. நாட்டுக்குள் ராணுவ தலையீடு இருக்காது. ஆனால், இவையெல்லாம் எங்கள் நாட்டை காக்க நாங்கள் தயாராக இல்லை என பொருள் இல்லை. டொனால்டு டிரம்புக்கு உலக நாடுகள்கண்டனம் தெரிவிக்க, அவரது முட்டாள் தனத்தினை நிறுத்த அனைத்து தொலைத் தொடர்புகளையும் நான் பயன்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார். வெனிசுலா நாட்டின் இயற்கை வளங்கள் மீது அமெரிக்கா பேராசை கொண்டுள்ளது. எனவே வெனிசுலா ஒருபொழுதும் அதனை விட்டுக் கொடுக்காது என்று கூறியுள்ளார்.