வாஷிங்டன், செப். 12 சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தகவல் தொடர்பை மீட்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் குறைந்து வரும் நிலையில் நாசா விஞ் ஞானிகளும் இஸ்ரோவுக்கு உதவி யாக விக்ரமின் சமிக்ஞைகளைப் பெற முயற்சி மேற்கொண்டு தங்களது விண் ஆய்வு நிலைய ஆன்டெனாக்கள் மூல மாக அதற்கு ஹலோ... ஹலோ... என தகவல்களை அனுப்பிக் கொண்டிருக் கின்றனர். சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிலை யில் விக்ரம் லேண்டரிடமிருந்து 14 நாட்கள் வரை சமிக்ஞைகள் பெற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். லேண்டருக்கு சிக்னல் அனுப்பப்படும் போது நிலவு ஒரு வானொலி அலைவரிசையைப் போல் சிறிய அளவிலான சிக்னலை திருப்பி அனுப்புகிறது. நாசாவின் ஜேபிஎல், டிஎஸ்என் நிலையங்கள் கலிபோர்னியா, ஸ்பெ யின், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் நான்கு பெரிய விண்ணில் ஆழமாக ஊடுருவி ஆய்வு செய்யும் ஆன்டெனாக்கள் உள் ளன. ஒரே நேரத்தில் பல செயற்கைக் கோள்களுடன் ரேடியோ வாயிலாக தொடர்புகொள்ளும் வசதியும் இங்கு உள்ளது. இந்த நிலையங்களின் உதவியுடன் இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள நாசா முயற்சித்து வருகிறது. பூமிக்கும் நிலவுக்குமான சரியான தூரத்தை கணிக்க நாசாவின் லேசர் ரிப்ளெக்டர் ஒன்று விக்ரமுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இதில் நாசா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. விக்ரம் நிலவில் தரையிறங்கும் போது அந்த லேசர் ரிப்ளெக்டரும் இயங் கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் விக்ரம் நிலவின் பரப்பில் சிக்கிக் கொண்டிருப்பதால் நாசாவும் தனது பேலோட் வரிசை கண்ணாடி களை இழந்து நிற்கிறது.