tamilnadu

img

கலிபோர்னியாவில்  கடும் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலத்தில் வெள்ளியன்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற் பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நக ரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.1 அலகாக பதிவாகியிருந் தது. நிலநடுக்கம் காரணமாக அப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடு மையாக குலுங்கின. ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் வியாழ னன்று ஏற்கனவே 6.2 ரிக்டர் அள விலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக் களை அச்சுறுத்திய நிலையில், வெள்ளியன்று மீண்டும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.