tamilnadu

img

அக்கிரம ஆட்சிக்கு முடிவுரை எழுதுங்கள்

விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்

விக்கிரவாண்டி,அக்.13- கடந்த எட்டு ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு - உரு வாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எத்தனை? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கப்பியாம் புலியூர், பனையபுரம், விக்கிர வாண்டி சாலை, இடைவிடாத சகாய மாதா ஆலயம் ஆகிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் நா.புகழேந்திக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பொதுமக்களுடன் கலந்துரையாடி னார்.

பின்னர் உரையாற்றிய ஸ்டாலின், திமுக வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு பேசியதன் சுருக்கம் வருமாறு:- வருகிற 21-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் உரியவராக விளங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி மறைவை அடுத்து - அவரது இடத்தைப் பூர்த்தி செய்வதற்கு இந்த இடைத்தேர்தல்.  நீங்கள் இங்கே பல்வேறு பிரச்சனை களைக் குறிப்பிட்டீர்கள். குறிப்பாக, குடிநீர்ப் பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, 100 நாட்கள் வேலைத் திட்டம் என இவை எதுவுமே இந்த ஆட்சியில் முறையாக நடை பெறவில்லை என்று குறிப்பிட்டீர்கள். அதிமுக ஆட்சி, மத்தியில் உள்ள மோடி ஆட்சிக்கு அடிபணிந்து இருக்கிறது. 

தமிழகத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் லஞ்சம் - ஊழல்தான்! குறிப்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை, போதைப்பொருள் குட்காவை எங்கு பார்த்தாலும் விற்பனை செய்து வருகிறது. ஆட்சியாளர்க ளுக்கு மாமூல் கொடுப்பதால் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் இந்த   பாஜகவும் துணை நிற்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ செய்தவர். யாரால் முதலமைச்சர் பதவி கிடைத்ததோ, அந்த அம்மாவை, இதுவரையில் ஒரு முறை யேனும் சிறைக்குச் சென்று பார்த்தாரா? இல்லை. நாம் ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலி தாவின் மரணத்திற்குக் காரணமானவர்களை முறையாகக் கண்டுபிடித்து சிறையில் அடைப்போம். ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். இந்த அநியாய  ஆட்சி, அக்கிரம ஆட்சிக்குப் பாடம் புகட்டும் வகையில் ஒரு முன்னோட்டமாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் புகழேந்திக்கு நீங்கள் வெற்றியை தேடித் தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.