tamilnadu

விஐடி நுழைவுத் தேர்வு

வேலூர், ஏப். 13- வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் இந்தாண்டு (2019-20) பிடெக் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல், இன்பர்மேஸன் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், உள்ளிட்ட 17 வகையான பட்ட படிப்புகள், விஐடி சென்னை வளாகத்தில் பிடெக் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், பேசன் டெக்னாலஜி மற்றும் 7 வகையான பட்ட படிப்புகள்.விஐடி போபால் வளாகத்தில் பிடெக் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியில், ஏரோ ஸ்பேஸ், உள்ளிட்ட 9 வகையான பட்ட படிப்புகள், விஐடி அமராவதி (ஆந்திரபிரதேசம்) வளாகத்தில் பிடெக் கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக் கல் உள்ளிட்ட 8 வகையான பட்ட படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் ஆகிய வெளி நாடுகளிலும், இந்தியாவில் 120 முக்கிய நகரங்கள் உட்பட 124 நகரங்களில் 163 மையங்களில் கணினி முறையில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 11-30 மணி வரையிலும், பிற்பகல் 12-30 முதல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6-30 மணி வரையிலும் என 3 பிரிவாக இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1,62,412 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தி லிருந்து பங்கேற்க 29,122 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்ததாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து 17,469 தமிழ்நாட்டிலிருந்து 16,583, தெலுங்கனா மாநிலத்திலிருந்து 16027 மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து 14,798 மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பங்கேற்கின்றனர்.இந்நிகழ்ச்சியில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், இயக்குநர் (பிடெக்) அட்மிஷன் டாக்டர் கே,மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.