வேலூர், ஜூன் 16- வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 3 பேர் மறைந்திருந்து ஆபாச படம் எடுத்து தங்களை தனிமையில் சந்திக்க வேண்டும் என்றும், பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த மாணவி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) தீ குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். அவருக்கு 90 விழுக்காடு தீக்கா யம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிறுமின் தந்தை பாகா யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த கண பதி (19), ஆகாஷ் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு தற்போது அழைத்து செல்ல முடியாததால் ஜாமீனில் விடுவித் துள்ளனர். கணபதி, ஆகாஷ் இருவரையும் சிறையில் அடைத்தனர்.