வேலூர்:
தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வசித்து வரும் வேட்டைக்கார பழங்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடி பட்டியலில் சேர்க்க மாநில அரசும் முதலமைச்சரும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் சேட்டு, பொதுச்செயலாளர் கங்காதரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாநிலச் செயலாளர் ஏ.வி.சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்டச் செயலாளர் ப.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வேட்டைக்காரன் பழங்குடி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.புது தில்லியில் அகில இந்திய விவசாயிகள் நடத்தும் போராட்டத் தில் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் திரளாக பங்கேற்பது என்றும் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் வாழும் மாவட்டங்களில் வீட்டுமனை முதியோர் ஓய்வூதியம் வழங்கக் கோரி இயக்கங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.