வேலூர், ஜூன் 6-வேலூர் ராணிப்பேட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக மாணவிகள் சேர்க்கை இன்றி மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த இருபாலர் அரசு மேல் நிலைப் பள்ளியில், நிர்வாகத்தின் தீவிர முயற்சியால் நடப்பு கல்வியாண்டில் 10 மாணவிகள் சேர்ந்துள்ளனர். 1970ஆம் ஆண்டில், ராணிப்பேட்டை நகரில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கிறிஸ்தவ அமைப்பு சார்பில் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு தொடங்கப்பட்டன. அப்போது ராணிப்பேட்டை சுற்று வட்டாரத்தில் ஆண், பெண் என தனித் தனியாக அரசுப் பள்ளிகள் இல்லாத சூழலில், அரசு நிதி உதவி பெறும் 2 தனியார் பெண்கள் பள்ளிகளில் மாணவிகளைச் சேர்க்க பெற்றோர்கள் முன்வந்தனர். தற்போது வரை ராணிப்பேட்டையில் இயங்கிவரும் இரு பாலர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பெண் மாணவர் சேர்க்கையின்றி, இரு பாலர்பள்ளியாக கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து. தற்போது 400 பேர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் மாணவிகளின் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பலனாக 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையில் பல்வேறு வகுப்புகளில் 10 மாணவிகள் சேர்ந்தனர். அவர்களை மாவட்டக் கல்வி அலுவலர் ஜி.அருளரசு, தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் பள்ளி சேர்ந்த மாணவிகள், பெற்றோர் களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.நிகழ்ச்சியில், பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி, ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.