இராமேஸ்வரம், நவ.23- இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கவேணடும். சேதமடைந்துள்ள விசைப்படகுகளுக்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும். இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க இந்தியா, இலங்கை அதிகாரிகள் பேச்சு வார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை முதல் மீனவர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி யுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கக் கூட்டம் மாவட்ட விசைப் படகு சங்கத்தலைவர் ஜேசுராஜ் தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது. மீனவர் சங்கப் பொதுச்செய லாளர் என்.ஜே.போஸ், எமரிட், சாகயம், உள்ளிட்ட தலை வர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், இலங்கைக் கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள அனைத்துப் படகுளையும் மீட்டுக் கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க முடி யாமல் கடலில் மூழ்கிய படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்திய,இலங்கை மீனவர்கள் பாரம்பரிய இடங்க ளில் மீன்பிடிக்க ஏதுவாக இரு நாட்டு அதிகாரிகள், மீன வர் சங்க நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறா மல் உள்ளது. பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிர தமர் மகேந்திர ராஜபக்சே ஆகியோர் இந்திய வரும் போது இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை குறித்து இந்தியப் பிர தமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண் டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகேந்திர ராஜபக்சே ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தவறவில்லை.