வேலூர்:
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் துணை ராணுவப்படை பாதுகாப்பு போட வேண்டும் என்று தேர்தல் அலுவலரை சந்தித்து திமுகவின் டி.ஆர்.பாலு மனு அளித்துள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்டு 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப்படைபாதுகாப்பு போட வேண்டும். 1,553 வாக்குச்சாவடிகளையும் வெப் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும். தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்க வேண்டும் என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு மனு அளித்தார்.