அனைத்துத் துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்று வெற்றிபெற செய்வீர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அழைப்பு
சென்னை, டிச.18- நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் அமல்படுத்தும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தேசம் காக்கும் மகத்தான ஜனவரி 8 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தமி ழகத்தில் அனைத்து துறை அரசு ஊழி யர்களும் வெற்றிகரமாக்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் (15.12.2019) மாநிலத் தலைவர் மு.அன்பரசு தலை மையில் நடைபெற்றது. பொதுச் ஆ. செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற் றனர். இக்கூட்டத்தில் ஜனவரி 8 வேலை நிறுத்தம் தொடர்பாக நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:
மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் உரிமைகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை கண்டித்தும், கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், 45 ஆண்டு கள் இல்லாத தேசிய அளவில் ஏற்பட் டுள்ள வேலைவாய்ப்பற்ற நிலையை போக்கிட வலியுறுத்தியும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினை கட்டுப் படுத்திடவும், தொழிற்சங்க சட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளை கண் டித்தும், அரசு பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்கும் நட வடிக்கைகளை திட்டமிட்டு சீர்குலைக் கும் நடவடிக்கைகளை கண்டித்தும், ரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை தனியார்மயம், வங்கிகள் இணைப்பை கண்டித்தும் மத்திய அரசின் 44 தொழி லாளர் நல சட்டங்களை 4 ஆக சுருக்கி தொழிலாளர் நலன்களை சிதறடிப்ப தும், மதவாத, நடவடிக்கைகளை கண் டித்தும், இந்திய நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் பல்வேறு முற் போக்கு சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தும் நிறைவேற்றப்பட்டு வரப்படும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை கண்டித்தும் அரசு ஊழியர்களின் பல்வேறு உரிமை கள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் கொள்கைகளை அப்ப டியே செயல்படுத்திவரும் மாநில அர சின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப் படுத்திட வலியுறுத்தியும், அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ள இந்திய நாட்டின் நலன் களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அங்கம் வகிக்கும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் 8.1.2020ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பங்கேற்பது; அனைத்துத்துறை சங்கங்களும் தேசபக்த போராட்டத்தில் பங்கேற்று அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண் டுமாய் மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.