வேலூர்:
மகாராஷ்டிரா மாநிலம்மும்பையில் கள்ளநோட்டு களை புழக்கத்தில் விட்ட தாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 2 பேரை கைது செய்த மகாராஷ்டிரா போலீசார், ஏழரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.கடந்த 5 ஆம் தேதி மும்பை கடை ஒன்றில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தமிழகத்திலிருந்து கள்ளநோட்டு சப்ளை செய்யப்படுவதாக தகவல்கிடைத்தது.
இதுகுறித்து தமிழக போலீசார் உதவியுடன் மகாராஷ்டிரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்துக்கு வந்த மும்பை காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான மகாராஷ்டிரா போலீசார், ஞாயிறன்று நள்ளிரவு சந்தேகத்தின் பேரில் வேலூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது, கிடைத்த தகவலின்பேரில் ஆம்பூர் அய்யனூரில் சரவணன் என்பவர்வீட்டில் சோதனை நடத்தி யதில், கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து ஏழரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த மகராஷ்டிரா போலீசார், பாஸ்கர் மற்றும் சரவண னை கைது செய்தனர். விசார ணையில், சரவணனுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு கள்ள நோட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள் ளது.