tamilnadu

தோழர் ஹென்றி லாசரஸ் காலமானார்....

யான சாமுவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

செயல் வீரருக்கு செவ்வணக்கம்
தோழர் ஹென்றி மறைவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி விடுத்துள்ள இரங்கல்செய்தியில், “தீக்கதிர் நாளிதழின் மாவட்ட நிருபராக செயல்பட்டு வந்த செயல் வீரர் தோழர் ஹென்றி. மக்கள் பிரச்சனைகளை பேசிக் கொண்டிருக்கும்போதே பிரச்சனைகளை விவாதத்திற்குரிய செய்தியாக மாற்றுவதில் வித்தியாசமான செயல்பாட்டாளர். இதழியல் துறையில் நேர்மையாக தனது பங்கை செலுத்தியவர் சமூக அவலங்களை செய்தியாக்கியவர். அனைத்துபத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பதிலும், சங்க செயல்பாட்டிலும் சிறப்பான பங்கை செலுத்தியவர்.நிருபராக மட்டுமின்றி ராணிப்பேட்டை பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தீக்கதிர் விநியோக பொறுப்பையும் மேற்கொண்டவர். 2003 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கிளைச் செயலாளராகவும் கட்சி கடமையை திறம்படச் செய்தவர்.அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, வேலூர் மாவட்ட செங்கொடி இயக்கத்திற்கும், தீக்கதிர் நாளிதழுக்கும் பேரிழப்பாகும். தோழர் ஹென்றிக்கு செவ்வணக்கத்தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனர்லிஸ்ட்ஸ்(டியுஜே) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் வெளியிட்டிற்கும் இரங்கல்செய்தியில், “நமது சங்கத்தின் மாநில இணைச்செயலாளரும் மூத்த நிர்வாகியும், சிறந்த வழிகாட்டி தோழருமான கே.ஹென்றியின் மறைவுச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். சங்கத்தின் வளர்ச்சியில் அவரது பங்கு அளப்பரியதாகும். அவரது மறைவு சங்கத்திற்கு மட்டுமல்ல, பத்திரிகை உலகிற்கும் பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் தீக்கதிர் மற்றும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் சங்கத்தின் சார்பில் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். 

தீக்கதிர் ஊழியர்கள் இரங்கல்
தோழர் ஹென்றி மறைவுக்கு தீக்கதிர் ஊழியர்கள் சார்பில் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், முதன்மைப் பொது மேலாளர் க.கனகராஜ், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன், பொறுப்பாசிரியர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், எம்.கண்ணன், அ.விஜயகுமார், அ.ராஜா, பொது மேலாளர்கள் சி.கல்யாணசுந்தரம், எஸ்.ஏ.மாணிக்கம், எஸ்.பன்னீர்செல்வம், ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.