tamilnadu

img

வாக்குச் சாவடியை கைப்பற்ற முயன்ற பாஜக முன்னாள் எம்எல்சி

லக்னோ, ஏப்.14-கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், உத்தரப்பிரதேசத்தின் கைரானா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டரசூல்பூர் பகுதியும் ஒன்றாகும்.இந்நிலையில், வாக்குப் பதிவன்று, ரசூல்பூர் வாக்குச் சாவடிக்கு, அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அடையாள அட்டைஇல்லாமல் விடமாட்டோம் என்று கூறி வெளியேற்றியுள்ளனர். அப்போது, திடீரென ஒரு கும்பல், போலீசார்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், வாக்குச் சாவடிகளை கைப்பற்றவும் முயற்சி செய்துள்ளது. நீண்டபோராட்டத்திற்குப் பிறகு, வானத்தை நோக்கி துப் பாக்கிச் சூடு நடத்தி, போலீசார் அந்தக் கும்பலை விரட்டியடித்து உள்ளனர்.இந்நிலையில் வாக்குச் சாவடியைக் கைப்பற்ற வந்தவரின் பெயர் சவுரவ் திரிவேதிஎன்பதும், அவர் பாஜக கட்சியின் முன்னாள் எம்எல்சி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.