லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு அதிகாரியை, தனக்கு ஷூ - லேஸ் கட்டவைத்த சம்பவம் கண்டனத் திற்கு உள்ளாகி இருக்கிறது.யோகா தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர் கள் மற்றும் அமைச்சர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், உத்தப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான லட்சுமி நாராயணன் இதில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அரசு அதிகாரி ஒருவரை, தனக்கு ஷூ மாட்டி, லேஸ் கட்டிவிடுமாறு அமைச்சர் கூறியதும், அந்த அதிகாரியும் வேறு வழியில்லாமல் ஷூ- லேஸை கட்டி விட்ட
தும் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து, பொது இடத்தில் அரசு அதிகாரியை, ஷூ லேஸ் கட்ட வைத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேள்வி எழுப்பியபோது, “இராமனின் செருப்பை வைத்தே ஆட்சி புரிந்த நாடு இது. அதுபோல இதுஒரு சகோதரரின் உதவியாக பாருங்கள், பாராட்டுங்கள்” என்று தெரிவித்துள்ளார். ‘அனுமான் ஜாட் இனத்தை சேர்ந்தவர்’ என்று கடவுள்களில் ஒருவராக கருதப்படும் அனுமனின் சாதியையே ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தவர்தான், பாஜக அமைச்சர் லட்சுமி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.