போபால்:
முதல்வரின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட துஷார்பஞ்சால் என்ற அதிகாரி, பாஜகமற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் களின் எதிர்ப்பால், பதவி ஏற்கமறுத்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. சிவராஜ் சிங்சவுகான் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில், சவுகான் தனது சிறப்புப் பணி அதிகாரியாக துஷார் பஞ்சால் என்ற அதிகாரியை நியமித்தார். அந்த அதிகாரியும் இந்த செய்தியை தனதுடுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தாம் 2001 முதல் பல முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர் களுடன் பணி புரிந்ததாகவும் தமது அதிர்ஷ்டத்தால் தற்போது இன்றைய மத்தியப் பிரதேச முதல்வருடனும் பணி புரிய உள்ளதாக கூறியிருந்தார்.இந்நிலையில்தான், இந்துக் களுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான அதிகாரி துஷார் பஞ்சாலை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எவ்வாறு தனது உதவியாளராக நியமிக்கலாம்? என்று பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜிந்தர் பால் சிங், முன்பு இந்துக்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக துஷார் பஞ்சால் டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்களை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வெளியிட்டார். தில்லி ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான ராஜிவ் துலியும், துஷாரின் பழைய டுவீட்டை சுட்டிக் காட்டி ‘மத்தியப் பிரதேசமாநிலம் பல நல்ல கலாச்சாரம் மற்றும் திறமையான பத்திரிகையாளர்களைக் கொண்டது. அவர்களில் ஒருவரை எடுத்துக் கொள்ளாமல் ஏன் சிவராஜ் சிங் இவரை தேர்வு செய்தார்? என்று கேள்வி எழுப்பினார்.இதையடுத்து, பின்வாங்கிய அதிகாரி துஷார் பஞ்சால், தனக்குவழங்கப்பட்ட பதவியை ஏற்க முடியாது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதி உள்ளார்.