tamilnadu

img

உன்னாவ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை - ரஞ்சன்கோகாய் கேள்வி


உன்னாவ் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடிதம் ஏன் என் பார்வைக்கு வரவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வால், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட உன்னாவ் நகரத்தைச் சேர்ந்த இளம்பெண், ஞாயிறன்று கொலை முயற்சிக்கும் உள்ளானார். அவர் சென்ற கார் மீது, லாரியை வைத்து மோதி, கொலைமுயற்சி நடந் தது. எனினும், படுகாயங்களுடன் அவர்தப்பினார். அதேநேரம் இளம்பெண் ணின் தாயாரும், உறவினரும் இறந்துபோனார்கள். இச்சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, குல்தீப் சிங் சென்கார் மற்றும் ஒன்பது பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், 20 பேர் மீது கிரிமினல் சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், விபத்துக்கு முன்பேஉன்னாவ் இளம்பெண்ணும், அவரது தாயாரும் “எங்களுக்கு ‘அச்சுறுத்தல்’ இருக்கிறது” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்துள்ளது.ஜூலை 12-ஆம் தேதி எழுதப்பட் டுள்ள அந்த கடிதத்தில், “ பாலியல்வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு இருக்கும் சஷி சிங்கின் மகன் நவீன்சிங், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் சகோதரர் மனோஜ் சிங் செங்கார், குன்னு மிஸ்ரா மற்றும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் 2019 ஜூலை7-ஆம் தேதி, வீட்டிற்கு வந்து எங்களைமிரட்டிவிட்டு சென்றனர். எங்களுக்குசாதகமாக- எங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நீதிபதியை விலைக்கு வாங்குவதன் மூலம் குல்தீப்சிங் மற்றும் சஷி சிங் ஆகியோரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, போலி வழக்கு மூலம் உங்களை சிறையில் தள்ளுவோம் என மிரட்டினார்கள்” என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தனர். 
இந்நிலையில் அந்த கடிதம் ஏன் இன்னும் ரஞ்சன் கோகாய் முன் வரவில்லை என்பது தொடர்பாக விளக்கம் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கடிதம் அவரிடம் வருவதற்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையை இன்னும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோயாய் உத்தரவிட்டுள்ளார்.