ஷாஜகான்பூர்:
சாமியார் சின்மயானந்த், உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் தனது ஆசிரமத்தின் பெயரில் சட்டக் கல்லூரி ஒன்றைநடத்தி வருகிறார். இங்கு முதுநிலை சட்டப்படிப்பு படித்து வந்த இளம்பெண் ஒருவர், சின்மயானந்த் மீது சில நாட்களுக்கு முன்பு, பாலியல் குற்றச்சாட்டு எழுப்பினார். காவல்துறையிலும் புகார் அளித்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.இதையடுத்து, சின்மயானந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனினும் அவரைகைது செய்யவில்லை. இதுகுறித்து பாதிக் கப்பட்ட மாணவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.“சின்மயானந்த் தன்னை மிரட்டி வல்லுறவு கொண்டதுடன், கடந்த ஓராண்டாக உடல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கினார். கடந்த ஞாயிறன்று, சிறப்பு விசாரணைக் குழு என்னிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அப்போது, பாலியல் வல்லுறவு குறித்து அவர்களிடம் நான் தெரிவித்தேன். இதன்பிறகும்கூட அவர்கள் சின்மயானந்த்தை கைது செய்யாமல்தான் இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.