கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை என ஜி20 நாடுகளுக்கு, ஐ.நா தலைவர் ஆண்டோனியோ குட்ரஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட ஜி-20 அமைப்பின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில், ஐநா சபை, உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் விடியோ மாநாட்டில் பங்கு கொண்டன. அப்போது, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை என ஜி20 நாடுகளுக்கு, ஐ.நா தலைவர் ஆண்டோனியோ குட்ரஸ் எச்சரித்துள்ளார். மேலும், உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை அவசியம் என்றும், பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.