எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான 30 சவப் பெட்டிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்தின் லக்சர் நகரில் 3,000 வருடங்களுக்குப் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சவப்பெட்டிகளில் 23 ஆண்களுக்காகவும், 5 பெண்களுக்காகவும், 2 சிறுவர்களுக்காகவும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வடிவிலான சவப்பெட்டிகளில், மம்மியின் கைகள் மூடப்பட்ட நிலையில் இருக்கும் பெட்டிகள் ஆண்களுக்கானது என்றும், கைகள் திறந்த நிலையில் இருக்கும் பெட்டிகள் பெண்களுக்கானது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சவப்பெட்டிகள் மீது பல வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன. இது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு என்று எகிப்தின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.