எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த கார் விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் தேசிய புற்று நோய் ஆய்வகத்தின் வெளியே கார் ஒன்று அங்கு நின்றிருந்த மற்ற கார்களுடன் மோதியது. இதில் மோதிய கார் வெடித்துச் சிதறியதில் வேகமாகப் பரவிய தீ மற்ற கார்களையும் பற்றியது. இதில் 19 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது விபத்தா அல்லது தீவிரவாத தாக்குதலா என்று விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அமைப்பும், இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.