தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீா்க்கும் வகையில், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அம்மனுவில், ஸ்டொ்லைட் ஆலையில் தினமும் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை உள்ளதாகவும், அதனை செயல்பட அனுமதித்தால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மத்திய, மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட உச்சநீதிமன்றம் ஸ்டொ்லைட் ஆலையில் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தியை செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இது தொடர்பாக ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயார்நிலையில் உள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட்வழியாக சென்று ஆய்வு மேற்கொண்டது.
அந்த குழுவில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங், சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்ஸிஜன்தொழிற்சாலை குறித்து தொழில் நுட்பஅறிவு சார்ந்த அதிகாரி, மத்திய சுற்றுச்சூழல்வனத்துறை பரிந்துரை பட்டியலில் இருந்து பத்தாவது பிரதிவாதி தேர்ந்தெடுக்கும்இரண்டு சுற்றுச்சூழல் வல்லுனர்கள் என 9 பேர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிந்த பிறகு தமிழ்நாடுமின்வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.