தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், தனது இடைநிலை அறிக்கையை கடந்த 14 ஆம் தேதி அரசிடம் வழங்கினார். ஒரு வாரத்துக்குள் முதல்வர் மிக விரைவாகசெயல்பட்டு அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத் துள்ளார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் 12 பேரின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்பவேலைவாய்ப்பை வழங்கினார். காயமடைந்த சிலருக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. முந்தையஆட்சியில் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம், ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படும் வழக்குகள் குறித்த விவரம் ஓரிரு நாட்களில் அரசாணையில் தெரிவிக்கப்படும்.கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் ஓய்வுபெற்ற நீதிபதிஅருணா ஜெகதீசன், முழு விசாரணையையும் முடித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறக்க துணையாக இருக்கமாட்டோம் என்பதை பலமுறை தெளிவுபடுத்தி உள்ளோம் என்றார்.பேட்டியின்போது, சமூக நலன்- மகளிர் உரிமைத் துறைஅமைச்சர் பெ. கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருளப்பப்புரத்தைச் சேர்ந்த செல்வசேகரின் சகோதரி கீதாவுக்கு, இளநிலை வருவாய் அலுவலர் பணிக் கான உத்தரவை கனிமொழி வழங்கினார்.