தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை ,மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமை தாங்கினார். உதவி மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) லெட்சுமிகாந்த் கபசுரக்குடிநீர் பொடிகளை வழங்கினார். இதனை மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.குமாரவேல், பெற்றுக் கொண்டர். அப்போது உதவி மருத்துவ அலுவலர் (சித்தா) சங்கர ராமசுப்ரமணியன் உடன் இருந்தார்.