திருவில்லிபுத்தூர், ஜூன் 27- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகள் ஜெயரஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடித்து படுகொலை செய்த காவல்துறை யினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் ஒரு கோடி நிவா ரணம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம், சத்தி ரப்பட்டி, சேத்தூர், திருவில்லிபுத் தூர் ஆகிய இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது இராஜ பாளையத்தில் சுப்பிரமணியன், சத்திரப்பட்டியில் கிளைச் செய லாளர் காளிமுத்து, திருவில்லிபுத் தூர் வடக்கு ரத வீதியில் நகர் செயலாளர் ஜெயக்குமார், சேத்தூரில் ஒன்றியச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாநிலக்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச்செயற் குழு, மாவட்டக்குழு உறுப்பினர் கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூர் ஒன்றிய குழு சார்பில் மம்சாபுரம் பேருந்து நிலையம் அருகே பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செய லாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தாலுகா செயலாளர் கே.அழகர்சாமி, சிவகங்கையில் மாவட்டச் செய லாளர் கே.வீரபாண்டி, மானாமது ரையில் மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெயராமன் திருப்புத்தூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் மோகன், தேவகோட்டையில் தாலூகா செயலாளர் ஏ.பொன் னுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடந்தது.
தேனி
தேனி மாவட்டம் கடமலை குண்டில், நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப் பினர் தயாளன், கோபால், ஆறு முகம், முருகன் உள்ளிட்டோர் ஆர்ப் பாட்டத்தில் கலந்துகொண்டனர். போடி தேவர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எஸ்.செல் வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.ராஜப்பன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பாண்டி யன், மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.