தூத்துக்குடி:
ஆதிச்சநல்லூரில் வாழ்விடங்களை தேடும் ஆய்வாளர்களுக்கு மூடிய நிலையில் மிகப்பெரிய முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக அகழாய்வு பணிதுவங்கியது. தொடந்து 40 நாள்களாகஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் மற்றும் லோகநாதன்தலைமையில் இந்த அகழாய்வு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40க்கு மேற்பட்டகுழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். இங்கு வித்தியாசமான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.கடந்த 8ஆம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகளும் 2 கைமூட்டு எலும்புகளும், அதன்பின்னர் ஒருமுதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப் பட்டன. தற்போது வரை 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே சிவகளையிலும் இதுவரை 20க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.கடந்த 28 ஆம் தேதி சிவகளையில் வாழ்விடங்களை தேடி சாமியாத்து சாலையில் உள்ள திரட்டில் அகழாய்வுப் பணியை துணை இயக்குனர்சிவானந்தம் துவக்கி வைத்தார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர்கொண்ட குழு இந்த பணியை மேற் கொண்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின் வாழ்விடங்களை கண் டறிவதற்காக ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதிகளில் உள்ள இடங்களில் 5 குழிகள் புதிதாக அமைத்து ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
அதில் முதல்கட்டமாக ஒரு குழியில் முன்னோர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் அதாவது மண்பாண்டம் மூலமாக சமையல் செய்யபயன்படுத்தும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆய் வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இடத்தில் தோண்டப்பட்ட மண்மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இங்கு மண் படிந்தகாலத்தினை கொண்டு இங்குள்ள குடியிருப்புகளின் வருடங்களை கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்கள். ஆதிச்சநல்லூரில் உள்ள ஆதித்தநங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்யஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்யும் போது இவ்வூர் வழியாக தாமிரபரணி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஓடிய சுவடுகள் தெரிகின்றன. எனவேஆய்வு முடிவில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகள் வெளிப்படும் என உலகமே எதிர்பார்க்கிறது.
திங்களன்று ஆதிச்சநல்லூர் பரம்புபுளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகில் ஒரே குழியில் மூன்று முதுமக் கள் தாழிகள் கிடைத்தன. அதில் ஒரு தாழி மூடப்பட்ட நிலையில் சுமார் 4 அடியில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழி 2004ல் ஆய்வு நடைபெற்ற போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் போலவே காணப்பட்டது. மேலும் அருகில் உள்ளமுதுமக்கள் தாழி சிதைந்த நிலையில் இருந்தாலும் கூட அதில் எலும்புக் கூடுகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அதை எடுத்து ஆய்வுக்கு அனுப்
பும் பணி நடந்து வருகிறது.
மேலும் ஒரு முதுமக்கள் தாழி
மேலே கருப்பு கீழே சிவப்பு நிறத்திலும், மற்றொரு மூடி உடைந்த நிலையில்மிகப்பெரிய அளவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மூன்றாவது முதுமக்கள் தாழி யை சுற்றி ஏராளமான சிறிய சிறிய அளவிலான கிண்ணங்கள் மற்றும் கிண்ணத்தை தாங்கும் தாங்கிகள் மற்றும் சிறுசிறு பானைகளும் கிடைத்துள்ளன. இதை யடுத்து ஆதிச்சநல்லூரில் தற்போது வரை 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கிடைக்கும் முதுமக்கள் தாழிகளை ஆய்வுக்கு அனுப்பும் பணி நடந்துவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வரும்போது மேலும் பல தகவல்கள் கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆய்வு குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, மத்திய அரசு, மாநில அரசுக்குஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய அனுமதி கொடுத்து உள்ளது. ஆனால்மாநில அரசு பராமரித்து வைத்திருக்கும் 114 ஏக்கருக்குள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே மாநில அரசு, தொல்லியல் துறை வேலியிட்ட இடங்களுக்குவெளியே தான் ஆய்வு செய்துவருகிறது. இதனால் எடுக்கப்படும் பலபொருள்கள் உடைந்து காணப்படுகின் றன. எனவே வேலிக்குள் உள்ள 114 ஏக்கரில் ஆய்வு செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தால் 144 வருடங்களாக ஆதிச்சநல்லூரில் செய்யப்படும் அகழாய்வு பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைத்திடும் என்றார். மாநில அரசின் பராமரிப்பில் உள்ள பகுதியில் அகழாய்வுப் பணி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி கொடுக்குமா?