tamilnadu

img

நாகையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

நாகப்பட்டினம், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நாகைநாடாளு மன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை அன்று, உதயநிதி ஸ்டாலின், நாகப்பட்டினம் அபிராமி திருவாசல் முன்பு பரப்புரையாற்றினார்.கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளையில், செவ்வாய்க்கிழமை காலை, உதயநிதி ஸ்டாலின் தேர்தல்பரப்புரையைத் துவக்கினார். அதன்பின்னர், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு, தி.மு.க. நாகைத் தெற்கு மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தி.மு.க.அமைச்சருமான உ.மதிவாணன் முன்னிலை வகித்தார். தி.மு.க.நாகை நகரச் செயலாளர் போலிஸ் பன்னீர் வரவேற்புரையாற்றினார்.


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டிச் சால்வை அணிவித்து, உரையாற்றினார். நாகை நாடாளுமன்றத் தொகுதியின் சி.பி.ஐ வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.சீனிவாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்ல வேட்பாளர், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்குச் சிறந்த சேவையாற்றிய எம்.செல்வராஜை, கதிர் அரிவாள் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அளித்துவெற்றி பெறச் செய்யுங்கள்…” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.தி.மு.க. நாகை ஒன்றியச் செயலாளர் க.ராஜேந்திரன் நன்றிகூறினார். ஏராளமானோர் கூடிய இந்தத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ஏ.எஸ்.மோகன், ஜி.கே.கனகராஜ், வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், கல்லார் ரபீக்,எம்.ஓ.எம்.செய்யது அலி, ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், கதிர் நிலவன், அரா.பேரறிவாளன், கோ.பாண்டியன், வி.ராமலிங்கம், சி.பி.எம்.நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.