tamilnadu

img

பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி செவ்வணக்கம்

திருச்சிராப்பள்ளி:
8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும் முன் முறையான விசாரணை, ஊதிய விகிதமாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்1946ல் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் இந்தியாவின் ஹாரிசன் தலைமையிலான மலபார் போலீசார் சுட்டதில் தோழர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத்திடலில் உயிர் நீத்தனர்.இவர்கள் நினைவாக  பொன்மலை தியாகிகள் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, டிஆர்இயு, சிஐடியு, மாதர் சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை அன்று பொன்மலை சங்கத்திடலில் பொன்மலை தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி பொன்மலை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைகமிட்டி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், டிஆர்இயு, சிஐடியு, மாதர் சங்கம் மற்றும் தோழமை சங்கத்தினர் மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.