tamilnadu

img

தமிழக அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ரெய்டு நடவடிக்கை என்ன என்று இதுவரை தெரியவில்லை

கும்பகோணம், ஏப்.6-


மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மதிமுக சார்பில் தேர்தல்பிரச்சாரம் கூட்டம் கும்பகோணத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தஞ்சை வடக்கு மாவட்ட கழகசெயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். குடந்தைசட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மதிமுக மாநில நிர்வாகி துரைபாலகிருஷ்ணன், திமுக வேட்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:மேகதாது அணை கட்டினால் மேட்டூர் முதல் கல்லணை வரைஎங்கும் தண்ணீர் வராது. இதனால்தமிழகமே பட்டினி பிரதேசமாக மாறிவிடும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அளித்து பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயு எடுத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, வேதாந்தாபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் வருமானம் ஈட்டக் கூடிய திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது. ஆணி செய்வதற்கு கூட அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனம், ரபேல் போர் விமானங்கள் செய்ய அனுமதி பெற்றுள்ளது. நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னால் தமிழக அரசுநடுங்கி ஒடுங்கி இருக்கிறது. இதற்குகாரணம் பருப்பு, ஆம்னி பஸ்ஊழல், கல்வித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறைஊழல், துணைவேந்தர் நியமன ஊழல் என அனைத்தும் செய்தஅமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித் துறை மூலம் ரெய்டு நடைபெற்றது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இதற்கு என்னபதில் என்று இதுவரை கூற முடியவில்லை. தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ரிமோட்கண்ட்ரோல் மத்திய அரசு இயக்கப்பட்டு வருகிறது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இவ்வாறு வைகோ பேசினார்.கூட்டத்தில் நகர திமுக செயலாளர் தமிழழகன் சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் நாகராஜன், கண்ணன், பார்த்தசாரதி, நகர செயலாளர் செந்தில்குமார், சிபிஐமாவட்ட செயலாளர் பாரதி, விசிக மாவட்ட செயலாளர் தமிழருவி, திகமாவட்ட செயலாளர் கௌதமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது செல்லப்பா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகம்மது சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.