தஞ்சாவூர், நவ.27- தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி யில் ப்ளஸ் 2 படித்து முடித்த மாணவர்களு க்கு இலவச மடிக் கணினி கேட்டு செவ்வாய்க் கிழமை அன்று இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தா ண்டு ப்ளஸ் 2 படித்து முடித்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வில்லை என கூறி முன்னாள் மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ப்ளஸ் டூ முடித்துவிட்டு உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்கப்படும் என்பதைக் கைவிட்டு, ப்ளஸ்டூ மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்து க்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் அபிஷேக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அரவிந்த சாமி, மாநகரச் செயலாளர் அருண்குமார், மாநகரத் தலைவர் சிரில் இமான், துணைச் செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.