தரங்கம்பாடி, ஜன.31- நாகை மாவட்டம் பொறையார் நகரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் ஆங்கிலத் துறை பல்வேறு போட்டிகளை நடத்தியது. சுற்று வட்டாரப் பள்ளி களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதே பகுதியில் உள்ள சர்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளி யின் மாணவ, மாணவியர்கள் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். ஆங்கிலப் பேச்சுப் போட்டி, ஆங்கிலக் குழு நாடகம், இவற்றில் முதல் பரிசுகளையும், ஆங்கிலப் பாடலுக்கு நடனம் மற்றும் குழு குரலிசை இவற்றில் இரண்டாமிடமும், ஒட்டு மொத்த புள்ளிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் சுழற் கேடயமும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ-மாணவிகளையும், ஆங்கிலத்துறை வழிகாட்டி ஆசிரியைகளையும் பள்ளி முதல்வர் பாண்டியராஜன், கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் மற்றும் பெற்றோர்கள்பாராட்டினர்.