நாகப்பட்டினம், மே 12-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு நாகையில் சனிக்கிழமை நடைபெற்ரது. மாநாட்டுக்குச் சங்க வட்டத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் டி.சசிகலா வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் வேலை அறிக்கையும், பொருளாளர் எம்.மேகநாதன் நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். வட்டத் துணைத் தலைவர்கள் கே.புகழேந்தி, பி.மோகன், இணைச் செயலாளர்கள் என்.அமுதா, பி.ரமேஷ் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.மாவட்டப் பொருளாளர் பா.ராணி, மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஜோதிமணி, இணைச் செயலாளர்கள் கே.இராஜூ, து.இளவரசன், தரங்கம்பாடி வட்டச் செயலாளர் சி.வாசுகி, நாகை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு.சிவகுமார், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க வி.பாலசுப்பிரமணியன், நீதித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க நாகை செயலாளர் சி.கலியபெருமாள், சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத் தணிக்கையாளர் எம்.மரகதம், த.மு.எ.க.ச. நாகைக் கிளைப் பொருளாளர் சு.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப.அந்துவன் சேரல் நிறைவுரையாற்றினார்.புதிய வட்டத் தலைவராக எம்.மேகநாதன், செயலாளராக எம்.தமிழ்வாணன், பொருளாளராக சி.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக சி.வாசு, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன் நன்றி கூறினார். மாநாட்டில், நாகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும். நாகப்பட்டினம் சுடுகாட்டில் உள்ள எரிவாயுத் தகன மேடையை செயற்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.