tamilnadu

img

பாப்பம்மாள் அன்னசத்திர இடத்தை மீட்டு வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.5-  திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் 7வது வார்டு முல்லைநகர் பகுதி யில் சுமார் நாலரை ஏக்கர் பரப்பளவில் பாப் பம்மாள் அன்னசத்திரம் உள்ளது. இந்த சத்தி ரத்திற்கு சொந்தமான இடத்தை ஒருசிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சிப்ப தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன்  தலை மையில் அப்பகுதி பொதுமக்கள் வியாழ னன்று கிழக்கு தாசில்தாரிடம் மனு கொடுத்த னர். அந்த மனுவில், பாப்பம்மாள் அன்னசத்திர இடத்தை மீட்டு வீடற்றவர்களுக்கு அங்கு வீடு கட்டித் தர வேண்டும் என கூறியிருந்தனர். மனு வை பெற்றுக் கொண்ட தாசில்தார், இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.  பின்னர் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா கூறுகையில், பாப்பம்மாள் அன்ன சத்திரத்திற்கு சொந்தமான இடத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சிப் பதாக கூறப்படுகிறது. எனவே இந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு அங்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்ககுமாடி குடியிருப்பு கட்ட வேண்டும். அதில் அரியமங்கலம் கோட்டத் திற்கு உட்பட்ட 7, 28, 29 வார்டு பகுதிகளில் நீண்ட காலமாக வாடகை வீட்டில் குடியிருப்ப வர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வீடு வழங்க வேண்டும் என்றார்.  அரியமங்கலம் கிளை செயலாளர் கிச்சான், முனுசாமி, கமாலுதீன், கமிட்டி உறுப்பினர் தீன், சந்திரா, கனல்கண்ணன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.