tamilnadu

img

கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பை மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி  அறக்கட்டளை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் பள்ளி மாண வர்களுக்கு எழுது உபகரணங்கள் வழங்கப்பட்டன. பேராவூரணி இந்திரா நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். அறக்கட்டளை கௌரவத் தலைவர் என். அசோக்குமார், பள்ளித் தலைமையாசிரியர் அன்புமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அறக்கட்டளையின் பொருளாளர் ஆர்.ராஜூ வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் சௌந்தரராஜன் பேசினார்.  முன்னதாக அறக்கட்டளையின் செயலாளர் ஏ.ஆனந்தராஜ் மற்றும் காலகம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரண்யா வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் 22 கர்ப்பிணி தாய்மார்க ளுக்கு நாட்டுச் சர்க்கரை, பால், ஆப்பிள், பேரீச்சம்பழம் , உலர் திராட்சை, கடலை மிட்டாய் போன்ற ஊட்டச்சத்து உணவுகள் உள்ளடக்கிய தலா ரூபாய் 250 மதிப்பு கொண்ட பைகளையும், இந்திராநகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில்  படிக்கும் 60 மாணவர்களுக்கு தலா ரூபாய் 100 மதிப்பில் எழுது உபகரணங்களும் வழங்கப்பட்டன.  முன்னதாக பள்ளியில் நடந்த மருத்துவ முகாமில்  பொதுமக்கள், மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள், ஆசிரியர் நீலகண்டன், ஊரணி அறக்கட்டளை உறுப்பினர்கள் குழ.சரவணன், பெஸ்ட் குமார், அன்வர்தீன், ஜி.ராஜா, பழ.பழனியப்பன் சிவ.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக அறக்கட்டளை துணைத் தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி நன்றிகூறினார்.