tamilnadu

img

மதுக்கூரில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கல்

தஞ்சாவூர், மே 25-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியத்தில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி பேசினார்.கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி 'தற்போதைய அரசியல் நிலைமைகள்' குறித்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.லெட்சுமணன், எம்.அய்யநாதன், எல்.சின்னப்பொண்ணு மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.