திருச்சிராப்பள்ளி: திருச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் எல்பின் குரூப் நிறுவனத்தின் சார்பாக புத்தாண்டு விழா அறம் மக்கள் நல சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர் ராஜா, நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும், ஸ்டான்பாப் காமெடி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினார்கள்.