tamilnadu

நாகப்பட்டினம் மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

நாகப்பட்டினம், மே 13-மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள், ஏ.வி.சி.கல்லூரியில் சீல் வைக் கப்பட்டு மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பினை ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சீ.சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.மேலும் வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணும் பணிநடைபெறுவதால் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல்பொதுப் பார்வையாளர் விஜயகுமார் தலைமையில்வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர் களுக்கு முதற்கட்டப் பயிற்சி வகுப்பு திங்கட்கிழமை நடைபெற்றது.


சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கி ரூ.1லட்சம் பறிப்பு 

தூத்துக்குடி, மே 13-நாசரேத் அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கி ரூ.1 லட்சம் பணம் பறித்த 6பேர் கும்பலை போலீசார்தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள அரியான்மொழியைச் சேர்ந்தவர் அந்தோணி பிச்சை மகன் வேல்துரை (47). தொழிலதிபரான இவர் சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பட்டு மகன் ராஜலிங்கம். இவர் வேல்துரைநடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார்.சூப்பர் மார்க்கெட் பணத்தை கையாடல் செய்ததாக ராஜலிங்கத்தை வேலையை விட்டு நீக்கினார் வேல்துரை. இந்நிலையில், அரியான் மொழியில், தான் கட்டி வரும்வீட்டை பார்ப்பதற்காக வேல்துரை சென்னையில் இருந்துஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை ராஜலிங்கம் உட்பட 6 பேர் கும்பல் வழிமறித்துதாக்கி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறித்துச்சென்றுள்ளனர்.இதுகுறித்து வேல்துரை மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராஜலிங்கம், முத்துலிங்கம், முத்துக்குமார், சரவணகுமார், மற்றொரு ராஜலிங்கம், சித்திரை செல்வம் ஆகிய 6 பேர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.