குடிநீர் தட்டுப்பாடு: புகார் தெரிவிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, மே 14-திருச்சி மாவட்டத்தில் கோடை காலத்தில் அனைத்து பகுதிக்கும் போதிய அளவு குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் மோட்டார் பழுது அல்லது குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டாலோஉடனே போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேவை ஏற்பட்டால் லாரிகள் மூலமும் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுமேலும் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக புகாரோ அல்லது ஆலோசனையோ மக்கள் தெரிவிக்க ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டுஅறையின் கட்டணமில்லா தொலைபேசி- 1077, 0431-2418995எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
மோடியின் ஆட்சி அதிகாரம் இந்த தேர்தலோடு முடிந்து விடும்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
கரூர், மே 14-அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட இடங்களில் திமுக வேட்பாளர் வி.செந்தில் பாலாஜிக்குஆதரவாக 2-வது நாளாக திங்கள்கிழமை இரவு வாக்குச் சேகரித்து மதிமுகபொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர் பேசுகையில், வேட்பாளர் செந்தில் பாலாஜி, விவசாய மக்களின்துயரங்களை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், வானமே கூரை என வாழும்மக்களுக்கு, 25,000 குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை, திமுக தலைவர் ஸ்டாலின் வழிமொழிந்ததோடு இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும் எனக் கூறியுள்ளார். மத்திய நரேந்திர மோடி அரசுக்கு கைகட்டி சேவகம் செய்யும் எடப்பாடி அரசு, தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றதோடு இல்லாமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஹைட்ரோ கார்பன்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் இப்போது 85 லட்சம் பேருக்கு வேலையில்லை. இதற்கு காரணம் இங்கு வரும் தொழிற்சாலைகள் எல்லாம், எடப்பாடி பழனிசாமி அரசு கேட்ட லஞ்சம், கமிஷன், ஊழல் காரணமாக வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன. தமிழகம் எல்லா துறைகளிலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஅரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி அரசுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.மோடி, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுகிறார். மோடியின்ஆட்சி அதிகாரம் இந்த தேர்தலோடு முடிந்து விடும். இவ்வாறு வைகோபேசினார்.