tamilnadu

img

மயிலாடுதுறையில் ராமலிங்கம் வெற்றி

தரங்கம்பாடி/கும்பகோணம், மே 23-மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்ட செ.ராமலிங்கம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆசைமணியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார்.இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கூறும்போது,  மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அத்தனையும் செய்து தருவேன். குறிப்பாக விவசாயிகளின் விவசாய நிலங்களையும், பாழ்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை தடுத்து நிறுத்திடவும், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளை மாவட்ட மாக்க பாடுபடுவேன். வாக்க ளித்து வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.