நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தின் புதிய வட்டாட்சியராக க.சித்ரா பொறுப்பே ற்றுக் கொண்டார். தேசிய நெடுஞ்சாலை (45A) தனி வட்டாட்சியராக பொறுப்பு வகித்து பணி மாறுதல் காரணமாக வெள்ளியன்று அவர் வட்டாட்சியராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் தரங்கம்பாடி வட்டத்தின் முதல் பெண் வட்டாட்சியர் என்பது குறிப்பிட த்தக்கது.